மீனவர்கள் கைது- ஜெய்சங்கருக்கு முதலமைசர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 8 மீனவர்களின் மீன்பிடி படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கைது, உபகரணங்கள் இழப்பு பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.