#BREAKING: Rajinikanth Health News : நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு. அக்டோபர் 15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.
"திருப்பதிக்கு லட்டு வழங்கியதாக கூறப்படும் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் செய்த விதிமீறல் என்ன?" மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
அண்ணன் திருமாவளவன் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீட்டில் சனாதனத்தை வைத்துக்கொண்டு வெளியில் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த வகையில் சமூகநீதி ஆகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தபோதும் விமர்சனம் செய்தார்கள் என்றும் பொறுப்புகளில் சிறப்பாக செய்துள்ளாரா, இல்லையா என பார்க்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.