K U M U D A M   N E W S

ஜி.கே.மணி பேசுவது அவருக்கு அழகல்ல - பாமக வழக்கறிஞர் பாலு ஆவேசம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டதாக ஜி.கே.மணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு, ஜி.கே.மணி இப்படி மாற்றிப் பேசுவது அவருக்கு அழகல்ல எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பெயரில் தவறான கடிதம்: பாமக-வில் புயலைக் கிளப்பிய புதிய சர்ச்சை!

டாக்டர் ராமதாஸ் மட்டுமே தலைவர், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் செல்லாது என்று தைலாபுரத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

16 குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அன்புமணிக்கு கெடு.. ராமதாஸ் மீண்டும் எச்சரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.