K U M U D A M   N E W S

பொன்முடி மீதான வெறுப்புப் பேச்சு வழக்கு: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்புப் பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்டது.

சீனாவிடம் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம் - அதிபர் டிரம்ப் பதிவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சமூக வலைதளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி வடமாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்!

சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.