தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - இபிஎஸ் கண்டனம்
முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இபிஎஸ் போராட்டம் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்டை மாநில நதிநீர் பிரச்னையில் அரசியல் லாபம் கருதி இபிஎஸ் வெற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக மக்களை குழப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய சிறையில் திராவிட மணி என்பவர் உயிரிழந்துள்ளார். திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
AIADMK Women Wing Protest Against DMK : திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணியினர் முழக்கமிட்டனர்.
மீனவர் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் பெயரளவுக்கு மட்டுமே கடிதம் எழுதுகிறார். மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை திமுக அரசால் நிர்பந்தித்து பெற முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்த விடியா திமுக முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் மரியாதை. சேலத்தில் பெரியாரின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1,331 விடுதிகளில் 98,909 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆதிதிராவிடர் மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாது அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்
ADMK Ex Minister Jayakumar First Exclusive Interview : குமுதம் செய்திகளுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் தலைமை செய்தியாளர் சிவா நடத்திய சிறப்பு நேர்காணல்.
2020ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு மீது தமிழக அரசு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sellurraju vs Saravanan: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டாக்டர் சரவணன் குறிவைத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.