ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் அன்பரசன் பெருமிதம்!
புத்தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார். அக். 9 மற்றும் 10 தேதிகளில் கோவையில் நடக்கும் உலகப் புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.