K U M U D A M   N E W S

அஜித் அகர்கருக்குப் பதிலாக பிரக்யான் ஓஜா... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகப் பிரக்யான் ஓஜாவும், புதிய உறுப்பினராக ரமேஷ் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மறைமலைநகரில் பரபரப்பு ! பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது ! அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !

மறைமலைநகரில் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காகத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானத்தைத் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SIR சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் திருத்தப் பணி! தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் மீண்டும் SIR திருத்தம் !

SIR தொடர்பான சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .

NARNIA : மீண்டும் வருகிறது NARNIA ! 90's Kid - ஸின் ஃபேவரைட் சிங்கம் அஸ்லான் உருவான கதை !

90ஸ் மற்றும் 2K கிட்ஸின் விருப்பமான கற்பனை உலகமான நார்னியா மீண்டும் திரைக்கு வருகிறது! கிரெட்டா கெர்விக் இயக்கத்தில் மெரில் ஸ்ட்ரீப், எம்மா மேக்கி, டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்தின் டிரெய்லர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ?...வைரல் வீடியோவால் பரபரப்பு!

ஜெர்மனியின் கொலோன் நகரில், துரித உணவகம் ஒன்றின் வெளியே 16 வயது சிறுமியிடம் மனித உருவிலான ரோபோ ஒன்று அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரத்துக்கு எதிராகத் துணிச்சல் குரல்...மாணவர் அரசியலில் நேஹா போராவின் பயணம்!

உத்தரகாண்ட் கிராமப்புறப் பின்னணியில் இருந்து ஜேஎன்யூ மாணவர் அரசியல் களத்துக்கு வந்த நேஹா போரா, கல்வி உரிமை, பெண்கள் பாதுகாப்பு, சமூகநீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இளம் தலைவராக உருவெடுத்துள்ளார்.

மோடியின் கைகளில் நீதிபதிகள் நியமனம் ! முன்னாள் நீதிபதி சந்துரு பரபரப்பு குற்றச்சாட்டு !

நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் ஆதிக்கம், கொலீஜியம் முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து முன்னாள் நீதியரசர் சந்துரு தெரிவித்த கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

டெல்லியில் போராட்டம்... சென்னையில் விஜய்யுடன் காஃபியா? ராகுல் காந்தியைச் சுற்றும் சர்ச்சை!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஒருபக்கம்... ராகுல் காந்தி எங்கே என்ற கேள்வி மறுபக்கம்… அரசியல் வட்டாரத்தில் பரவும் விமர்சனங்களின் பின்னணி என்ன?

“முதல்ல உங்க வீட்டுப் பொண்ணுக்கு செய்வீங்களா?” – AI ஆபாச விவகாரம்.. ஆவேசமான குஷ்பூ!

பெண்களின் புகைப்படங்களை AI மூலம் ஆபாசமாகச் சித்தரிப்பவர்களுக்கு நடிகை குஷ்பூ வைத்த கேள்வி… இப்போது பேசுபொருளாகியிருக்கிறது!

“கெரியரை ஏன் காலி பண்றீங்க?” முத்துக்குமரன்-வஹிதா விவகாரத்தில் பொங்கிய ‘சிறகடிக்க ஆசை’ ஸ்ரீதேவா!

முத்துக்குமரன் – வஹிதா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களும், ஆடியோ பதிவுகளும் வெளியாகி வரும் நிலையில்,சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் மனோஜ் (ஸ்ரீதேவா) தற்போது முத்துக்குமரனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார்.