அரசு வேலை வாங்கித்தருவாத கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்த விடியா திமுக முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
32 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ”மாநகர காவல்” திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருவதாக குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாரா என அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார்.
சர்வாதிகார பாசிச முறையில் செயல்பட்டு வருகிற பிரதமர் மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சௌந்தரராஜனின் அறியாமையை காட்டுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையார் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனை. 16 கால் மண்டபம் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது
உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
Pawan Kalyan on Tirupati Laddu Issue : திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் விலங்குகளில் கொழுப்புகள் உள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்பதாக ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
Rajinikanth About Manasilayo Song : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக். 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ரிசல்ட் குறித்தும் மனசிலாயோ பாடலின் ஹிட் பற்றியும் ரஜினி பேசியது வைரலாகி வருகிறது.
இன்று ( செப். 22) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் ஆரம்பித்துள்ள புகைச்சல் விரைவில் பற்றி எரியும் என கூட்டணி இல்லை என்றால் திமுக படுதோல்வியை சந்திக்கும் என எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இன்ட்ரோ விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், துப்பாக்கி குறித்து விளக்கம் கொடுத்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Tirupati Laddu Issue : திருப்பதி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் நந்தினி நெய் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி, மின்சார பூட்டுகளை பயன்படுத்த கர்நாடகா பால் கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் 300 அடி நீளத்திற்கு நிலம் தனியாக பிளந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக குழாயில் நீர் வராததால், சென்று பார்த்தபோது பூமி விரிசல் விட்டிருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
Madurai Child Death : மதுரையில் பால் பவுடர் குடித்த 2 மாத குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.