K U M U D A M   N E W S

AI

சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்? - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம் எல் ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டீ குடிப்பதால் எதுவும் மாறாது.. சரளமாக பொய் சொல்கிறார்கள்.. சசிகலா தாக்கு

தமிழக முதலமைச்சர் டீ கடையில் டீ குடிப்பதாலையோ, மைக்கை பிடித்துக்கொண்டு தங்களின் பெருமைகளை மட்டும் பேசுவதாலேயோ எதுவும் மாற போறதில்லை என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா இறந்ததும் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தாவல்.. அப்பாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் கேள்வி

40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாரி முழுக்க பேராபத்து!! - அதிகாரிகளே மிரண்ட தருணம்.. உள்ளே இருந்தது என்ன தெரியுமா..?

புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1000 கிலோ நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.  

சென்னையின் முக்கிய சாலையில் திடீர் பள்ளம்... மக்கள் பீதி

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி 2வது பிரதான சாலையில் இன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது.15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

“அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள்... நீக்கப்பட்டதுதான்... உதயநிதி பதிலில் முதிர்ச்சியில்லை” EPS ஆவேசம்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நீக்கும் நடைமுறை ஜெயலலிதா காலம் முதலே இருப்பது தான் என்றும், ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமுக தள்ளாடிருக்கும்.. ஆனால் தப்பிச்சுருச்சு... ராஜன் செல்லப்பா விமர்சனம்!

வானிலை அறிவித்தபடி மழை பெய்திருந்தால் திமுக தள்ளாடி இருக்கும். வெள்ளத்தை வைத்து சிலர் வணிகம் செய்வது உண்டு. அதை யாரும் செய்து விடக்கூடாது என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதிக்கு அனுஷா தயாநிதி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது. 

களத்தில் முதலமைச்சர்.. சொந்த தொகுதியில் அதிரடி ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

கவரைப்பேட்டை ரயில் விபத்து... 25 பேருக்கு பறந்த சம்மன்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பாக 25 பேருக்கு வழங்கப்பட்ட சம்மன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மீண்டும் பரபரப்பு... அதிரடி சோதனையில் குதித்த வருமான வரித்துறையினர்!

பூர்விகா மொபைல் நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக். 17) திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்வு... கலக்கத்தில் மக்கள்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து இன்று (அக். 17) ரூ. 57, 280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அண்ணாமலையார் திருக்கோயில்.... புரட்டாசி மாத பூரண பலன்கள்!

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னையில் மழைக்கு வாய்ப்பு..? லேட்டஸ்ட் அப்டேட்!

புதுச்சேரி - நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அதேநேரம் சென்னையில் இன்று மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது.  

2 நாளில் 11.84 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவச உணவு..

கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 11.84 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை.. 213 மருத்துவ முகாம்கள் அமைப்பு

சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தி.மலையில் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.

அதிகாலையிலேயே பரபரப்பான சென்னை.. அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை

சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் சோதனை.

வானிலை ஆய்வு மையம் கொடுத்த ரிப்போர்ட்! அதிர்ச்சியில் இருந்து மீண்ட மக்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

சென்னை தத்தளிக்க யார் காரணம்? அதிமுக + பாஜக vs திமுக

சென்னை தத்தளிக்க யார் காரணம்? அதிமுக + பாஜக vs திமுக

பள்ளி , கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்

ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லீவ் கிடையாது... பேக்-அ மாட்டிட்டு கிளம்புங்க! பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு!

ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.