K U M U D A M   N E W S

age

"பெற்றோரின் வேதனை இந்த முதலமைச்சருக்கு கொஞ்சமாவது புரியுமா?" இபிஎஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தொடரும் கொலைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக நிர்வாகி மீது பாலியல் வழக்கு: சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது? இபிஎஸ் கடும் தாக்கு!

நாகர்கோயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

அண்ணன் சீர் திட்டம்... ஆதார் கார்டு இல்லையா? 8 கிராம் தங்கம் பெற முடியுமா? தமிழ்நாடு அரசு சொன்ன தகவல்!

தவெக அரசு அறிவித்திருந்த "அண்ணன் சீர் திட்டத்தை" பயன்பெற விரும்புவோருக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பிரான்சில் 140 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடம்...! தற்போது அதன் நிலைமையைப் பாருங்க !

பிரான்ஸ் நாட்டின் லிமோஜஸ் நகரில் 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நகர மன்றக் கட்டிடம் தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்துள்ளது; இரண்டு உலகப் போர்களைக் கடந்த இந்தக் கட்டிடத்திற்கு நேர்ந்த பாதிப்பின் பின்னணி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித உரிமைக்காகப் போராடிய இரும்புப் பெண்மணி... யார் இந்த நவநீதம் பிள்ளை?

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதித்துறையில் ஆற்றிய பங்களிப்புகளால் உலகளவில் கவனம் பெற்றவர்.

என்ன லிஸ்ட் பெருசா போகுது... சூடுபிடிக்கும் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழ் !

அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் இருவரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கிவரும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், இதுவரை அழைப்பு விடுத்துள்ள முக்கிய நபர்களைத் தொடர்ந்து லிஸ்ட் பெருசா போய்க்கொண்டிருக்கிறது. இருவரது திருமண வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அழைப்பு விடுக்கும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

அனிருத் - காவ்யா ஜோடிக்கு விரைவில் டும் டும் டும்... பிரபலங்களுக்குப் பறக்கும் திருமண அழைப்பிதழ்!

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு கலாநிதி மாறன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு வைரலான மாணவர் பாரதிதாசன் !.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வாழ்த்து !

மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பின் பின்னணி மற்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.

"சோறுதான் திங்கிறாரா தெரில ! " - அமைச்சர் வெங்கட்ராமனை வெளுத்தெடுக்கும் பரந்தாமன் !

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக பரந்தாமன், அமைச்சர்களுக்கு பகிரங்க சவால் விடுத்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

NARNIA : மீண்டும் வருகிறது NARNIA ! 90's Kid - ஸின் ஃபேவரைட் சிங்கம் அஸ்லான் உருவான கதை !

90ஸ் மற்றும் 2K கிட்ஸின் விருப்பமான கற்பனை உலகமான நார்னியா மீண்டும் திரைக்கு வருகிறது! கிரெட்டா கெர்விக் இயக்கத்தில் மெரில் ஸ்ட்ரீப், எம்மா மேக்கி, டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்தின் டிரெய்லர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .