சினிமா

என்ன லிஸ்ட் பெருசா போகுது... சூடுபிடிக்கும் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழ் !

அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் இருவரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கிவரும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், இதுவரை அழைப்பு விடுத்துள்ள முக்கிய நபர்களைத் தொடர்ந்து லிஸ்ட் பெருசா போய்க்கொண்டிருக்கிறது. இருவரது திருமண வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அழைப்பு விடுக்கும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

என்ன லிஸ்ட் பெருசா போகுது... சூடுபிடிக்கும் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழ் !
Anirudh – Kavya Maran Wedding Reception !

அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழ் : என்ன லிஸ்ட் பெருசா போகுது , அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு திருமண வரவேற்பு அழைப்பிதழ்களை கலாநிதி மாறன் அவர் மனைவி காவேரி இருவரும் வழங்கிவருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் தொடர்பான தகவல்கள் கவனம் பெற்றுள்ளன. வரும் நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இசையுலகில் அனிருத்... கிரிக்கெட் உலகில் காவ்யா மாறன்!

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கி ROCKSTAR ANIRUDH என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறார்.

மறுபுறம், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து வருகிறார். கிரிக்கெட் போட்டிகளின்போது மைதானத்தில் தோன்றும் அவர், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக அறியப்பட்டவர்.

நவம்பர் 11-ல் திருமணம்... நவம்பர் 21-ல் வரவேற்பு!

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக, செஷல்ஸ் தீவுகளில் திருமணம் நடைபெறலாம் என்றும் தகவல்கள் பரவின. எனினும், திருமணம் நடைபெறும் இடம் மற்றும் தேதி தொடர்பான தகவல்களை இரு குடும்பத்தினரும் தனியாக குடும்பத்தினரிடையே முக்கியமானவர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நவம்பர் 21-ஆம் தேதி சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறவிருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் அவர் மனைவி காவேரி இருவரும் வழங்கி வரும் புகைப்படங்கள், இந்தத் திருமண நிகழ்வு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நான்கு தனி விமானங்கள் ஏற்பாடா?

திருமண நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கியப் பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவர்களின் பயணத்திற்காக நான்கு தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பிதழ்!

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை வழங்கும் பணியில் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அந்த வகையில், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவர் மனைவி காவேரி இருவரும் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து திருமண வரவேற்புக்கான அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கும் அழைப்பு!

தொடர்ந்து, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி நேரில் சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளனர். தென்னிந்திய அரசியல் தலைவர்கள் மத்தியில் இந்த அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷுக்கும் அழைப்பு!

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோருக்கும் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கலாநிதி மாறன் – காவேரி தம்பதியினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கும் அழைப்பிதழ்!

கர்நாடக அரசியல் தலைவர்களுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை கலாநிதி மாறன் – காவேரி தம்பதியினர் நேரில் சந்தித்து அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.

பிரதமர் மோடிக்கும் நேரில் அழைப்பு!

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அரசியல் மற்றும் திரையுலகின் முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.

கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி, அனிருத்தின் தந்தை ரவிச்சந்தர் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் முதல் முக்கியப் பிரமுகர்கள் வரை... பெரிதாகும் அழைப்பிதழ் பட்டியல்!

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21-ஆம் தேதி சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறவுள்ளதாகக் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுக்கும் வகையில் பத்திரிகை அடித்துள்ளனர். அந்த பத்திரிகை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இசையுலகில் பிரபலமான அனிருத் மற்றும் கிரிக்கெட் உலகில் கவனம் பெற்ற காவ்யா மாறன் ஆகியோரின் திருமண நிகழ்வு, அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது. திருமண வரவேற்பில் யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள், மேலும் எந்தெந்த முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்படுகின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.