K U M U D A M   N E W S

crime

கரூர் துயரம்: ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கேட்ட போலீஸ்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

ஆன்லைன் டிரேடிங்: மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி...2 பேர் கைது

ஆன்லைன் டிரேடிங் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது

9 ஆண்டுகளாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்: போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரம்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாததால் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.

பாலியல் வழக்கில் ஆஜராகாத சாமியார்: சதுர்வேதி மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு!

கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

குற்றவாளிகளை விமானத்தில் சென்று கைது செய்யலாம்: தமிழக டிஜிபி சுற்றறிக்கை!

வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 45 லட்சம் மோசடி: ஒருவர் கைது!

மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. கென்யா நாட்டு இளைஞர் கைது!

ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

மாதாந்திர மாமூல் கேட்டு அட்டகாசம்; நிறைமாத கர்ப்பிணியின் காதை வெட்டிய கும்பல்!

மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகளின் காதலனைத் தாக்கிய முன்னாள் பாஜக நிர்வாகி.. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சென்னை அயனாவரத்தில் மகளின் காதலன் சந்திக்க வரும்போது தாக்குதல் நடத்திய முன்னாள் பாஜக நிர்வாகியான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்