K U M U D A M   N E W S

முன்னாள் காதலியை வேவு பார்த்த வழக்கு: டிடெக்டிவ் ஏஜெண்ட் உட்பட 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்கத் திட்டம்!

ஓய்வுபெற்ற மாஜிஸ்திரேட்டின் மகளை டிடெக்டிவ் ஏஜெண்ட் வைத்து வேவு பார்த்த வழக்கில் கைதான முன்னாள் காதலன் உட்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐயா...ஜாலி... எங்க ஊருக்குப் பஸ் வந்துடுச்சு.. 13 வருடக் காத்திருப்பைக் கொண்டாடிய பொதுமக்கள்!

குடியாத்தம் அருகே 13 வருடங்கள் கழித்து, தங்கள் கிராமத்திற்கு வந்த பேருந்தைக் குத்தாட்டம் போட்டு பேருந்தினை உற்சாகமாக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்

கருப்புப் பட்டியலில் 40 மருந்துகள்.. 3 நிறுவனங்கள்: TNMSC அதிரடி நடவடிக்கை!

தமிழக மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) தரமற்ற மருந்துகள் என 40 மருந்துகளையும், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

தூத்துக்குடியின் அடையாளமாகத் திகழும் பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாகத் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

ரூ.35 லட்சம் நில விவகாரம்.. மன்சூர் அலிகான் மகன் தகராறு.. போலீசார் விசாரணை!

நடிகர் மன்சூர் அலிகான் நிலத்திற்காக்நிலம் வாங்குவதற்காக ரூ. 35 லட்சத்தை வாங்கி விட்டு இடத்தை தரவில்லை இடத்தின் உரிமையாளரிடம் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்திற்கு வந்து விளக்கம் அளித்த நிலையில், நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவு.. 3 நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிப்பு!

கேரளா மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மாநிலத்தில் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3-வது அணிக்குத் தமிழகத்தில் அணி இல்லை: CPI திட்டவட்டம்

தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மூன்றாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. உபரிநீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழப்பு!

பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.