K U M U D A M   N E W S

ஸ்டாலின்

கர்நாடகாவிற்கு தமிழ்நாடு பலத்தை காட்ட வேண்டும்; கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டால் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கு காட்ட முடியும்.

மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது... என்னென்ன தண்டனைகள்?... முழு விவரம்!

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

பணத்தை கொடுத்து வாக்கை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைப்படலாமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

''திமுக-அதிமுக ஜென்ம எதிரி. ஆனால் இந்த தேர்தலில் காசை வாங்கி கொண்டு அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி உள்ளார்கள். இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடந்து இருந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்பது தான் கள நிலவரம்''

கள்ளச்சாராய உயிரிழப்பு... 'ஜெட்' வேகத்தில் சிபிசிஐடி விசாரணை ... மேலும் 2 பேர் கைது!

கைதான பரமசிவம், முருகேசன் இருவரும் சின்னதுரையிடம் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரையும் சேர்ந்து இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுக்கு ஒரு விடிவுகாலமே இல்லையா?.. புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!

விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் வாக்களிக்க 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Pa Ranjith: ஆம்ஸ்ட்ராங் கொலை... திமுக மீது குற்றச்சாட்டு... பா ரஞ்சித்துக்கு போஸ் வெங்கட் அட்வைஸ்

பகுஜன் சமாஜ்வாதி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்திருந்த இயக்குநர் பா ரஞ்சித், திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து பா ரஞ்சித்துக்கு நடிகர் போஸ் வெங்கட் அட்வைஸ் செய்துள்ளார்.

'இனி ஸ்டாலினிடம் சொல்லி எந்த பயனும் இல்லை'.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு ட்வீட்.. என்ன விஷயம்?

''மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்''

ஸ்டாலினுக்கு மட்டும்தான் தெரியும்.. எல்லாம் பாகப் பிரிவினை சண்டை - இ.பி.எஸ். தாக்கு

கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று  நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது... தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தும் பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.