காலியாகிய துணைத் தலைவர் பதவி: அடுத்த மாதம் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்?
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு அடுத்த மாதம் தேர்தல் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.