K U M U D A M   N E W S

கோவிலில் பிரச்னை ஏற்படுத்த முயற்சித்தால் வழக்குப் பதிவு - சென்னை உயர்நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூத்த மருத்துவர்களை பணியில் நியமிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,  கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என  தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேலை வாங்கி தருவதாக 50 லட்ச ரூபாய் வரை மோசடி... முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கமா? இல்லயா? என்பது விளக்கமளிக்க காவல்துறைக்கு உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tamil Nadu Fishermen Fined 1 Crore Rupees: ஒரு மீனவருக்கு ஒரு கோடி அபராதமா? Rameswaram | Sri Lanka

ஒரு மீனவருக்கு 18 மாத சிறை மற்றும் படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம் இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம்

பிஞ்சுகளை காவு வாங்கிய தந்தை - போலீசாரையே அலறவிட்ட வாக்குமூலம்

மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரையும், குழந்தைகளையும் வெட்டியதாக கைதான அசோக்குமார் பரபரப்பு வாக்குமூலம்

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தது - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

யூடியூபுக்கு புதிய Rules? influencers மீது பாயப்போகும் நடவடிக்கை? ’இனி இதையெல்லாம் பண்ணகூடாது!

யூடியூபில் influencers எனக் கூறிக்கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிவரும் யூ டியூபர்கள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறிய கருத்து என்ன? யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகள் வரப்போகிறதா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

செல்போனில் பிஸியான தாய் அடித்தே கொலை செய்த கொடூரம் கணவன், இரு மகன்கள் கைது

எப்போதும் செல்போனிலேயே பேசிக் கொண்டிருந்த பெண்ணை, அவரது குடும்பமே அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

சீமானின் முதல் மனைவி யார்? விஜயலட்சுமியுடன் ரகசிய திருமணம்? சீமானை நெருக்கும் நீதிமன்றம்!

நடிகை விஜயலட்சுமி தான் சீமானின் முதல் மனைவியா என்று சென்னை உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது, நாம் தமிழர் தம்பிகளை கதிகலங்க வைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....