தமிழகத்தில் பதற்றம்.. பரிதவிக்கும் உயிர்கள்! மருத்துவர்கள் போராட்டம்
கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
அரசினர் பெரியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட் ஆனதை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் போராட்டம், மீனவர்களுக்காக முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா சாலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஊருக்குள் வாழ பயமா இருக்கிறது எனக்கூறி மக்கள் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.
சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காப்பாற்று.. காப்பாற்று.. என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.