K U M U D A M   N E W S

தேர்தல்

உதயநிதியின் தடால் புடால் விருத்து.. முக்கிய தலைகளை தாண்டி யாருக்கும் அழைப்பில்லை... என்ன காரணம்...?

Minister Udhayanidhi Stalin : லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார்.

'டிரம்ப்பை கண்டிப்பாக வீழ்த்துவோம்'.. கமலா ஹாரிஸ் சூளுரை.. பெருகும் ஆதரவு!

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தேர்வாக கமலா ஹாரிஸுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை விட அதிக ஆதரவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 27 மாகாணங்களில் உள்ள பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.

அதிர வைத்த ஜோ பைடனின் பதிவு! டொனால்ட் ட்ரம்ப்பை நேருக்கு நேர் எதிர்கொள்கிறாரா கமலா ஹாரிஸ்?

Joe Biden in US Presidental Election : 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார். 

வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க சென்ற ஜோ பைடன்.. பதறியடித்து தடுத்த மனைவி!

joe biden trying to kiss another woman: ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோ பைடன், ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்க செல்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா.. அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்க முடிவு?

US President Joe Biden : 'கொரோனா காரணமாக ஜோ பைடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸ் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார்' என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

உதயநிதி பிரச்சாரத்தால் வெற்றி; 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - திமுக அமைச்சர் பெருமிதம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த இரண்டு நாள் பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பணத்தை கொடுத்து வாக்கை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைப்படலாமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

''திமுக-அதிமுக ஜென்ம எதிரி. ஆனால் இந்த தேர்தலில் காசை வாங்கி கொண்டு அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி உள்ளார்கள். இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடந்து இருந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்பது தான் கள நிலவரம்''

முதல்ல அவங்கள பிடிச்சி உள்ளே போடுங்க.. சாட்டை துரைமுருகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த இபிஎஸ்

திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் சாட்டை துரைமுருகனை கைது செய்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவதூறு பரப்புவதில் திமுக பல அவார்டுகள் வாங்கி வைத்துள்ளது - ஜெயக்குமார் விமர்சனம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் திமுக அரசு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறி விட்டதாக சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டி இருந்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அள்ளித்தெளித்த வாக்காளர்கள்... 82.48 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு

276 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு சிறு, சிறு பிரச்சனைகளை தவிர அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!

விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் வாக்களிக்க 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது ஒரு தொடர்கதை... டாஸ்மாக் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்தான விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது... தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தும் பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது நம்பிக்கை இல்லை - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பிரேமலதா விளக்கம்

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா.. இத்தனை பேர்களா? இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினர்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருமான ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். ஸ்டார்மர் புதிய பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 20 ஆண்டுகளில் இது தொழிலாளர் கட்சிக்கு சிறந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

சொந்த கட்சியினரே ஜோ பைடனுக்கு எதிர்ப்பு... அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவின் மனைவி போட்டி?

முதல் விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் குரலை உயர்த்தி பேச, ஜோ பைடன் மிகவும் தயங்கியபடி பேசினார். பல்வேறு விஷயங்களில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு, அதிபர் பைடன் பதிலடி கொடுக்காதது ஜனநாயக கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதிபர் தேர்தல்: முதல் விவாதத்தில் அனல்பறக்க பேசிய ஜோ பைடன்-டொனால்ட் டிரம்ப்... வெற்றி யாருக்கு?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் முதன்முறையாக நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்றனர்.