சென்ட்ரல் ரயில் நிலையம்: உறங்கும் பயணிகளிடம் செல்போன் திருட்டு வழக்கில் இருவர் கைது!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.