கொடைக்கானலில் நாளை தொடங்குகிறது மலர்க்கண்காட்சி!
தமிழகம் முழுவதும் கோடை வெயிலியின் தாக்குதல் அதிகரிக்கும் நிலையில், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கிறது.