K U M U D A M   N E W S

குற்றப்பிரிவு

அன்பில் மகேஷுக்கு மீண்டும் சிறை! நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்... நாளை ஜாமீன் மனு விசாரணை!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்தடுத்து அவுட்டாகும் விக்கெட்டுகள்... அன்பிலைத் தொடர்ந்து சேகருக்கும் ஆப்பு வைத்த காவல்துறை!

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி வழக்கு.. வீரமணிக்கு குண்டாஸ்...தீவிரமடையும் விசாரணை!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர் வீரமணி, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஸ்ரீரங்கம் கோயில் ரூ.50 கோடி நிலம்... திமுக நிர்வாகி மீது வழக்கு; விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக திமுக பிரமுகர் ராம்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்... விரிவடையும் போலீஸ் விசாரணை!

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், விசாரணை விரிவுபடுத்தப்பட்டு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்....நிர்வாண கோலத்தில் சிக்கிய புதிய ஆதாரங்கள்!

ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்,தேனாம்பேட்டை பங்களாவில் நிர்வாண கோலத்தில் அவர் உல்லாசமாக இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் வழக்கு....போலீசாரிடம் சிக்கிய வீடியோ!

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறுமியின் ஆபாச வீடியோ காவல் துறையினரிடம் சிக்கியுள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை என மோசடி.. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்!

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

காலையிலேயே அதிரடி.. தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழகம் இன்று முக்கிய நகரங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் இன்ஸ்பெக்டர்.. காரணம் என்ன?

பொருளாதாரக் குற்றப்பிரிவில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர் ரேணுகா தேவி, உயர் அதிகாரி கண்டித்ததால் மனமுடைந்து தூக்க மாத்திரை மற்றும் பி.பி. மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.