K U M U D A M   N E W S

கரூர்

அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் - கரூர் துயரம் குறித்து எஸ்.வி. சேகர் கடும் தாக்கு!

நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்

கரூர் துயரம்: ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கேட்ட போலீஸ்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

கரூர் நெரிசல் விவகாரம்: தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - ஐஏஎஸ் அமுதா விளக்கம்!

கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.

கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

என் வாழ்வில் வலி மிகுந்த தருணம்; அனைத்து உண்மைகளும் வெளியே வரும் - கரூர் சோகம் குறித்து விஜய் வேதனை!

கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கரூர் விபத்து: தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை - ஆதவ் அர்ஜூனா மௌனம்!

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் சோகத்துக்கு தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - வைகோ குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.

TVK தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்: இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 3ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.

கரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்- வெறிச்சொடி காணப்பட்ட இருக்கைகள்

குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

சுவர் விளம்பரத்திற்கு போட்டி: கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாருடன் வாக்குவாதம்

சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பிரச்னையால் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாரிடம் வாக்குவாதம்