K U M U D A M   N E W S

காலியாகும் அதிமுக கூடாரம்..செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

அதிமுகவில் இருந்து விரைவில் 15 எம்.எல்.ஏ-க்கள் வெளியேறுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ள கருத்து, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

"இடைத்தேர்தலில் சரித்திர வெற்றி"..எம்எல்ஏவாகப் பதவியேற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா..cm vijay-க்கு நன்றி!

தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இன்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் இருவரும் எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சர்களையே மிஞ்சும் சௌமியா, பிரேமலதா?சட்டமன்றத்தில் புதிய பாய்ச்சல்!

சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளைத் தரவுகளுடன் தொடர்ந்து முன்வைத்து வரும் சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

10 அதிமுக எம்எல்ஏக்களுக்கு தவெக வலை? செங்கோட்டையன் சொன்னது என்ன?

அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளளது.

அமித் ஷாவை வைத்து காய் நகரத்தும் ஈபிஎஸ்! த.வெ.க.விற்கு நெருக்கடியா?

த.வெ.க.வின் அதிமுக நிர்வாகிகள் மீதான கவனத்தை தடுக்க, எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமையின் தீர்ப்புக்கு காத்திருக்கிறாரா எடப்பாடி?....

“எங்களுக்கு கார் வேண்டாம்”... அதற்கு பதில் சௌமியா அன்புமணி கேட்டது என்ன?

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவித்திருந்த நிலையில், பாமக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார் எங்களுக்கு வேண்டாம் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

அம்மா ஆன்மா மன்னிக்காது.....தூத்துக்குடி அ.தி.மு.கவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டார்

எ ல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதுபோல அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாஜிக்களும் பனையூரை நோக்கிச் செல்கிறார்கள். அப்படி சென்ற கடம்பூர் ராஜுவை, அவரது மாவட்ட அ.தி.மு.க.வினரே ரவுண்ட் கட்டி தாக்குகிறார்கள். 'கோவில்பட்டியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வாய்ப்பை கடம்பூர் ராஜுவுக்கு வழங்கிய அம்மாவின் ஆன்மா ஒரு காலமும் அவரை மன்னிக்காது' என்று கடுமையாக சாபம் விடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். கூடவே ராஜுவுக்கு எதிரான போராட்டங்களும் வலுத்திருக்கின்றன!

ராயப்பேட்டை To பனையூர்: தவெகவில் ஐக்கியமான அதிமுக மாஜிக்கள்!

அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாகவும், முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இன்று தவெகவில் இணைந்தனர்.

தலைநகரில் அதிரடி மாற்றம்.. புது முகங்களை களமிறக்கும் திமுக!

சென்னையில் தற்போது பதவியில் இருக்கும் 8 எம்.எல்.ஏ-க்களை மாற்றிவிட்டுப் புதுமுகங்களைக் களமிறக்க திமுக அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.

கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.. 'பி.பி. அதிகமாகிவிட்டதோ' என சபாநாயகர் கிண்டல்!

சட்டப்பேரவைக்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றதை, அமைச்சர் ரகுபதியும் சபாநாயகர் மு. அப்பாவுவும் விமர்சித்துள்ளனர்.