வெறுப்பரசியலின் ஆணிவேரே அறிவாலயம் தானே…முதலமைச்சருக்கு வானதி சீனவாசன் கேள்வி

இருமொழி தான் வேண்டும் என்ற உங்கள் போலி பரப்புரையும், தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டும், கேரள அரசையும் குடிநீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் இணைத்துக் கொண்டு தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நீங்கள் போட்ட நாடகமும், மக்களிடம் எடுபடாமல் படுதோல்வியடைந்துவிட்டது என வானதி சீனிவாசன் பதிவு

Mar 27, 2025 - 16:20
Mar 27, 2025 - 16:46
 0
வெறுப்பரசியலின் ஆணிவேரே அறிவாலயம் தானே…முதலமைச்சருக்கு வானதி சீனவாசன் கேள்வி
வானதி சீனிவாசன் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மொழியை வைத்து பிளவு ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்வதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இந்த நிலையில், யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.

Read more :சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை.. சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

இந்தி திணிப்பு மற்றும் பேரினவாதத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.  வாக்கு வங்கிக்கான கலவர அரசியல் இதுவல்ல. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் குரல் நாடெங்கும் எதிரொலிப்பதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது. பாஜகவினரின் பேட்டிகள் மூலம் இது தெரிகிறது” என்று பதிவிட்டிருந்தார்.

நாடகம் படுதோல்வியடைந்துவிட்டது

இதற்கு பதில் அளிக்கும் வகையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “வெறுப்பரசியலின் ஆணிவேரே அறிவாலயம் தானே? இந்துக்களின் நம்பிக்கைகள் மீது தொடர்ந்து சொல்லெறிபவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு, இந்துக்கடவுள்களைக் கொச்சைப்படுத்தியவர்களைப் பதவியில் அமர்த்திக்கொண்டு, முருகனின் முதற்படைவீடான பரங்குன்ற மலையில் அசைவம் கொண்டு செல்லப்பட்டதைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த உங்களுக்குத் தானே வெறுப்பரசியல் குறித்து பாடம் எடுக்க வேண்டும்?

Read more :பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகணும்..EPS-ஐ எச்சரித்த OPS

 உங்கள் அரசியல் வாழ்வைக் காத்துக் கொள்ள தமிழக மக்களை இனம், மொழி மற்றும் சமூக வேறுபாடுகளால் பிரித்தாள முயற்சிக்கும் உங்களுக்கு, அதை சுட்டிக்காட்டினால் எதற்கு இத்தனைக் கோபம் வருகிறது? மேலும், ஊர் முழுக்க மூன்று மொழிக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை நடத்திக் கொண்டு அரசுப் பள்ளிகளில் “இருமொழி தான் வேண்டும்” என்ற உங்கள் போலி பரப்புரையும், தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டும், கேரள அரசையும் குடிநீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் இணைத்துக் கொண்டு தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நீங்கள் போட்ட நாடகமும், மக்களிடம் எடுபடாமல் படுதோல்வியடைந்துவிட்டது என்பதை உங்கள் அறிவாலய அரசே நன்கு உணரும்.

தமிழகம் கூடிய விரைவில் மீளும்

இந்த அதிர்ச்சிகளிலிருந்து மீள முடியாமல், “வக்ஃப் வாரிய திருத்த மசோதா”-விற்கு எதிரான தீர்மானம் என்று நீங்கள் கிளப்ப முயலும் புது புரளியும் கூடிய விரைவில் நீர்த்துப்போகும், நீங்கள் கட்டமைத்த திராவிட மாயைகளிலிருந்து தமிழகம் கூடிய விரைவில் மீளும்” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow