TATA IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி.. போக்குவரத்து மாற்றம்..!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் மைதானம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Mar 22, 2025 - 08:43
Mar 22, 2025 - 08:46
 0
TATA IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி..  போக்குவரத்து மாற்றம்..!
TATA IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி.. போக்குவரத்து மாற்றம்..!
டாடா ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. தொடந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி, நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்காக சேப்பாக்கம் மைதானம் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 
TATA IPL Season -2025 தொடரில் சென்னை சூப்பர் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் ஹோம் கிரவுண்டான  23.03.2025, 28.03.2025, 05.04.2025, 11.04.2025, 25.04.2025, 30.04.2025 & 12.05.2025 ஆகிய நாட்களில் சென்னை M.A சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளன. இப்போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு போட்டி நடைபெறும் நாட்களில் 17.00 மணி முதல் 23.00 மணி வரையிலும், பின்வருமாறு வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.  
வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:- 
வாகன நிறுத்தத்திற்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்:- 
வாகன அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். 
அனுமதி அட்டை வாங்காத வாகனங்கள் :- 
போட்டியை காண சொந்த வாகனத்தில் வரும் நபர்கள் கதீட்ரல் சாலை மற்றும் R.K சாலை வழியாக காமராஐர் சாலை சென்று மெரினா கடற்கரை சாலை அடைந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தி நடைபயணமாக சென்று மைதானத்தை அடையலாம். 

போட்டியை காண டாக்சிகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் போன்ற வணிக வாகனங்களில் வரும் நபர்களுக்கு அண்ணாசாலையிலிருந்து வாலாஜா சாலைக்குள் சென்று மைதானத்திற்கு அருகில் இறக்கிவிடப்பட்டு, மேலும் வாகனங்கள் சிவானந்தா சாலையில் நிறுத்த அனுமதிக்கப்படும்.
வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது.  அவ்வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல/இறக்கிவிடுவதற்கு அனுமதிக்கப்படும்.  பொதுமக்கள்  பிரஸ் கிளப் சாலை வழியாக சென்று கிரிக்கெட் மைதானத்தை அடையலாம்.
விக்டோரியா ஹாஸ்டல் சாலை

விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும் .வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை.
பெல்ஸ் சாலை
பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும். பாரதி சாலையிலிருந்துபெல்ஸ் சாலை செல்ல அனுமதிக்கப்படும்.
பாரதி சாலை

வாலாஜா சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.

ரத்னா கஃபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும்.

மேலும், பொதுமக்கள் MRTS, உள்ளூர் ரயில் அல்லது மெட்ரோ ரயில் அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையம் மூலமாக சேப்பாக்கம் இரயில் நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு இலவச பயணம்
கிரிக்கெட் போட்டிகளுக்காக தமிழக அரசு சார்பிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் சார்பிலும்  ரசிகர்களுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போட்டி நடைபெறும் நேரங்களில், போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு, அரசு பேருந்து மற்றும் மெட்ரோவில் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow