‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Mar 12, 2025 - 16:37
Mar 12, 2025 - 16:41
 0
‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

மாஸ் என நினைத்து ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர்கள் முதல் தற்போது பள்ளி மாணவர்கள் வரை பொது இடங்களில் கெத்து காட்டுகிறோம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் ரூட்டு தல பிரச்னையில் ஒருவரையொருவர் தாக்கி கொள்வது வாடிக்கையாகி உள்ளது.

இந்த நிலையில், தான் சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் மீது கல் வீசிய நான்கு நந்தனம் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கும்,  பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் கிண்டி ரயில் நிலையத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்பொழுது நந்தனம் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை கற்களால் தாக்கியுள்ளனர்.

அதில் ரயிலில் பயணித்த பயணி மீது கற்கள் பட்டு காயம் அடைந்துள்ளார். அந்த பயணி கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது நான்கு நந்தனம் கல்லூரி மாணவர்களை மாம்பலம் ரயில்வே ஆய்வாளர் வைரவன் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Read more: அமைச்சர் பொன்முடி மீது பாஜக பிரமுகர் சேற்றை வீசிய விவகாரம் – காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

 

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow