இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: அமெரிக்காவை கடுமையாக சாடிய ரஷ்யா!

இஸ்ரேல் - ஈரான் இடையே உள்ள போர் சூழலை சுட்டிக்காட்டி தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளது ரஷ்யா

Oct 2, 2024 - 20:27
 0
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: அமெரிக்காவை கடுமையாக சாடிய ரஷ்யா!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.

இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் வழியுறுத்தியும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது. 

போர் விதிகளை தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைகள் மீதும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை கவலையடைச் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் என்ற நகரில் உள்ள நிவாரண முகாம்களில் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளான ஈரான் தற்போது இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. லெபானான் மீதும் ஹிஸ்புல்லாக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதமாக, ஈரான் வெகுண்டு எழுந்துள்ளது. 

அதன்படி நேற்று (அக். 1) இரவு இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை சிறிதும் எதிர்பாராத இஸ்ரேல் ராணுவம் ஸ்தம்பித்து போனது. இந்த சம்பவம் உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்துள்ளது. காஸா, லெபனானில் உள்ள பயங்கரவாதிகள் கற்றுக் கொண்ட வேதனையான பாடத்தை ஈரானும் விரைவில் கற்றுக் கொள்ளும். 

எங்களை யார் தாக்கினாலும் அவர்களை மீண்டும் தாக்குவோம். தங்களை தற்காத்துக் கொள்ளும் வலிமையும் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் உறுதியும் இஸ்ரேலுக்கு இருப்பதை ஈரான் மறந்துவிட்டது” எனத் தெரிவித்தார். 

மேலும் படிக்க: அறிவுள்ள எந்த அரசும் இதை செய்யாது.. ஆனால் திமுக செய்யும்.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஜெயக்குமார்

இந்நிலையில், இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை, அமெரிக்க அதிபர் பைடன் வண்மையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பைடன், இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவ படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த போர் சூழலை சுட்டிக்காட்டி தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளது ரஷ்யா. ”மத்திய கிழக்கில் நடக்கும் போர்கள் ஜோ பைடனின் தோல்வியை காட்டுகிறது. பிரச்சனைகளை முடிப்பதில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் அறிக்கைகள் பிரயோஜனமற்றது” என கடுமையாக சாடியுள்ளது ரஷ்யாவின் வெளியுறவுத்துறை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow