K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் 15 பேர் மீது குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் மேலும் 15 பேரை குண்டாசில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளது.

கடவுளை வைத்து அரசியல் செய்கிறார் சந்திர பாபு நாயுடு.. - ஜெகன் மோகன் குற்றச்சாட்டு

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார் 

அரசுப்பேருந்தை அலட்சியமாக ஓட்டிய ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே செல்போனில் பேசியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

லட்டில் விலங்கு கொழுப்பு.. ஆந்திர முதலமைச்சர் விளக்கமளிக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் விளக்கம் கேட்டுள்ளார்

சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும்.. - அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது 

RSS அணிவகுப்பு... தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் வரும் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

வருவாய் கோட்டாட்சியர் வாகனம் மோதிய விபத்து... பரிதாபமாய் பறிபோன உயிர்கள்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே வருவாய் கோட்டாட்சியர் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதி... விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வழக்கில் 4 காவலர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவக்குமார் குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் அவரை போலீசார் தாக்கி வந்தது விசாரணையில் அம்பலமானது.

நிலை தடுமாறிய வீட்டிற்குள் புகுந்த அரசுப்பேருந்து.. அலறிய பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி சீருடையில் மாணவிக்கு வளைகாப்பு.. வைரலான ரீல்ஸ்... ஆசிரியை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு சக மாணவிகள் வளைகாப்பு செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோ வைரலானது. இந்நிலையில் பள்ளி ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  

போராட்டத்தை கைவிடாவிட்டால் நடவடிக்கை - சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை

ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தை கைவிடாவிட்டால் வரும் திங்கள்கிழமை தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பூதாகரமாக வெடிக்கும் திருப்பதி லட்டு விவகாரம்.. ஆய்வுக்கு தயார்.. நெய் சப்ளை செய்த நிறுவனம் அதிரடி

திருப்பதி லட்டு தொடர்பான எந்த ஆய்வுக்கும் தயார் என திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டை ஃபுட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது 

நதிகள் சீரமைப்பு.. முதலமைச்சர் ஆலோசனை

சென்னையில் உள்ள நதிகள் சீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

அதிமுகவினர் மீது பொய் வழக்கு... கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி...

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு முடக்க நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

துணை முதலமைச்சராகும் உதயநிதி..? - தனது ஸ்டைலில் பதில் சொன்ன ரஜினி | Kumudam News 24x7

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறார் என்ற சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு என்னிடம் அரசியல் குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என ஏற்கனவே சொல்லியிருப்பதாக கோபமாக பதிலளித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா..? ஆட்சியர் மறுப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட வருவாய் துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு தூத்துக்குடி ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்

#Breaking: அக்டோபர் 27-ல் த.வெ.க மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை.., தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் தாராபுரம் பகுதியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

BREAKING | சூட்கேஸில் பெண்ணின் உடல்: கொலையாளிக்கு கோர்ட் போட்ட உத்தரவு

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை கொலை செய்த மணிகண்டன் என்பவருக்கு நீதிமன்றக் காவல். மணிகண்டனை அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

சுனாமி குடியிருப்பில் அசம்பாவிதம் – 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நாகை செல்லூர் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விஜயகாந்த், மனைவி பாண்டி மீனா, 2 வயது குழந்தை மீது மேற்கூரை விழுந்துள்ளது

JUST IN | மாஞ்சோலை விவகாரம் – பிபிடிசி நிர்வாகத்திடம் இன்று விசாரணை

நெல்லை மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக பிபிடிசி தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் இன்று விசாரணை. 2 நாட்களாக தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று நிர்வாகத்திடம் விசாரணை நடைபெறுகிறது

கேரளாவில் வெடித்த சர்ச்சை.., 20 நடிகைகளுக்கு நடந்த சோகம்

கேரளாவில் பூதாகரமாக வெடித்துள்ள நடிகைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 20 நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் கொடுமை நடந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது.

இன்றோடு 100 ஆண்டுகள் கடந்தன.., ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் நன்றி

"சிந்து சமவெளி நாகரிகம் குறித்து ஜான் மார்ஷல் அறிவித்து இன்றோடு 100 ஆண்டுகள் ஆன நிலையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். சிந்து சமவெளி நாகரிகத்தில் திராவிடத்தின் பங்கு குறித்தும் தெரிவித்திருந்த ஜான் மார்ஷலுக்கு நன்றி - முதலமைச்சர் X தளத்தில் பதிவு