K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இடைக்காலத் தடை

சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RSS ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது... காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணை

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.  

முல்லை பெரியாறு விவகாரம்.. EPS-க்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இபிஎஸ் போராட்டம் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்டை மாநில நதிநீர் பிரச்னையில் அரசியல் லாபம் கருதி இபிஎஸ் வெற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக மக்களை குழப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இழந்த 10% வாக்குகளை மீட்க வேண்டும்... ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் வலியுறுத்தல்

10% வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. இழந்த வாக்குகளை மீட்கும் வகையில் செயல்பட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் 

நடிகை வனிதாவுக்கு மீண்டும் "டும் டும் டும்"

நடிகை வனிதாவுக்கு நடன இயக்குநர் ராபர்ட் உடன் அக்டோபர் 5ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணிக்கு 95 ரன்கள் டார்கெட்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அலட்சியம்.. பறிபோன உயிர்? போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடகை பைக்குகளுக்கு செக்... ஆட்டோ ஓட்டுனர்கள் அதிரடி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். 

செவி சாய்க்காத சாம்சங் நிறுவனம்.. சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாம்சங் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

துணை முதலமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து வடிவேலு வாழ்த்து

மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

கோவை ஈஷா யோகா மையத்தில் பரபரப்பு.. போலீசார் அதிரடி ஆய்வு..

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக காமராஜ் என்பவர் செனனி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் ஈஷாவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி.. குற்றப்பத்திரிகை நகல் வழங்கிய நீதிமன்றம்

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது.

திடீரென இடிந்து விழுந்த சுவர்... தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள வணிக வளாகத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்... ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி

சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர் களுடன் சர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு கிடந்த மதுபாட்டில்களை கண்டு அதிருப்தி அடைந்தார்.

ICU – வில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் தற்போது ஐசியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை பெற எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகியுள்ளார்.

ரஜினிகாந்த் உடல்நிலை.. மா சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்

நடிகர் ரஜினிகாந்திற்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடரும் லாக்கப் டெத் - EPS கண்டனம்

திருச்சி மத்திய சிறையில் திராவிட மணி என்பவர் உயிரிழந்துள்ளார். திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம்... அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அதிகாலையிலேயே பரபரப்பு.. ஒரே இமெயிலில் சென்னையை அலறவிட்ட மர்மநபர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில், இது மிரட்டல் புரளி என தெரியவந்தது. 

நடிகர் ரஜினிகாந்திற்கு இதய பரிசோதனை | Kumudam News 24x7

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு! முதலமைச்சர் X தளத்தில் பதிவு| Kumudam News 24x7

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஜம்மு காஷ்மீரில் பரபரப்பாக தொடங்கிய இறுதிகட்ட வாக்குபதிவு | Kumudam News 24x7

ஜம்மு காஷ்மீரில் பரபரப்பாக தொடங்கிய இறுதிகட்ட வாக்குபதிவு