#BREAKING || நாடோடி இன பெண் மீது கொடூர தாக்குதல்
சென்னை அருகே போரூர் பகுதியில் நாடோடி இன பெண் மீது கொடூர தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
சென்னை அருகே போரூர் பகுதியில் நாடோடி இன பெண் மீது கொடூர தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜூனா, நம்பள்ளி நீதிமன்றத்தில் அமைச்சர் சுரேகா மீது அவதூறு வழக்கு.
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு. அக்டோபர் 15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.
மன்னம்பந்தல் ஊராட்சியை மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு. ஊராட்சியை இணைப்பதை எதிர்த்து கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆட்சியரிடம் வழங்க வந்த மக்கள்
தெலங்கானாவில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மேடை சரிந்து விபத்து. ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்காக சென்றிருந்த போது பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நின்று கொண்டிருந்த மேடை சரிந்தது
மதுரை துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன், குமார், முத்துச்சாமி, முத்து ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு. மூதாட்டியை தாக்கிய புகாரில் மதுரை துணை மேயர் உட்பட 5 பேர் மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு
பழைய கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவறி விழுந்து ராகுல் (14) நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
"திருப்பதிக்கு லட்டு வழங்கியதாக கூறப்படும் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் செய்த விதிமீறல் என்ன?" மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக 8ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாக தகவல்
திருவண்ணாமலை அருகே ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம்புதூர் கிராமத்தில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஃப்ரீசர் பாக்ஸிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 12 பேர் மயக்கம்
அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை செல்கிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.இலங்கையின் புதிய அதிபர் அனுரகுமார திசநாயக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்திக்கிறார் ஜெய்சங்கர்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலையில் உள்ள கால்வாயை சுத்தம் செய்யும் பணி. கழிவுநீர் கால்வாயை எந்தவொரு பாதுகாப்பு உபகரணமின்று சுத்தம் செய்யும் அவலநிலை
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு. வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கக்கோரி வழக்கு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் கோயில் பூசாரி மற்றும் வங்கி ஊழியர்கள் 2 பேர் விசாரணைக்கு ஆஜர். வழக்கு தொடர்பாக 500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது
சிறைகளில் சாதிய அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. சாதிய அடிப்படையில் பாகுபாடு என்பது காலனிய நிர்வாகத்தையே காட்டுகிறது- உச்சநீதிமன்றம்
திண்டுக்கல், பழநி சாலையில் உள்ள தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை
பெரியார் சிலையை உடைப்போம் என பேசியதாக இந்து முன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு. கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசியதாக வழக்கு. வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
கேரளா திருச்சூர் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் மூலம் கொள்ளையர்கள் தப்பியோட்டம். போலீசார் பிடிக்க முற்பட்டபோது தாக்கியதால் ஒரு கொள்ளையன் என்கவுன்ட்டர், மற்றொருவருக்கு காலில் காயம், 5 பேர் கைது
திரைப்பட பின்னணி பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது
ஈஷா யோகா மைய நிறுவனத்துக்கு எதிரான சோதனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்
அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.
ராஜாஜிக்கு ஏன் கட்டவுட் வைக்க வேண்டும் ? திருமா விளக்கம்