வடகிழக்கு பருவமழை.. ஆரம்பம் முதல் இறுதி வரை.. முதலமைச்சரின் துரித நடவடிக்கை | Kumudam News 24x7
வடகிழக்கு பருவமழையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கைகளின் தொகுப்பு.
வடகிழக்கு பருவமழையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கைகளின் தொகுப்பு.
தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்து திராவிடம் எனும் சொல் எதற்காக நீக்கப்பட்டது என செல்வபெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டப்படி நடக்காமல் இஷ்டப்படி நடப்பவர் ஆளுநர் பதவி வகிக்கவே தகுதியற்றவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் 11வது மாடியில் இருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழந்தார். தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
சென்னை தொலைக்காட்சி பொன்விழா, இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தவறாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது பயிற்சியாளர் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து போலீசார் பயிற்சியாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கடற்கரையில் குடும்பத்துடன் குளித்த 5 பெண்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வெட்டுக்காடு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தது. இந்நிலையில், புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் விளக்க மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுவை பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வயநாடு மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதற்கு குஷ்பூ மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவோடு இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆவின் பச்சை பால் பெயர் மாற்றப்பட்டு, விலை உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
ஈஷா யோகா மையத்தில் தங்களின் மகள் இருப்பதாகவும், அவர்களை மீட்டு தர கோரியும் பெண்களின் தந்தை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கோணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
மதுரையில் இன்று நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான பேருந்து துவக்க விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசனும் அக்கட்சியின் மாநகராட்சி துணை மேயர் நாகராஜனும் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிபிஏ, பிசிஏ படிப்புகளை புதிதாக தொடங்க அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என மண்டல இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18-10-2024 | Mavatta Seithigal
01 PM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7