K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு சென்ற போது நேர்ந்த சோகம்...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கடற்கரையில் குடும்பத்துடன் குளித்த 5 பெண்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.

collapsed-overhead-reservoir-tank

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வெட்டுக்காடு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தது. இந்நிலையில், புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்..' சர்ச்சையான விவகாரம்... காவல் ஆணையர் விளக்கம்

ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் விளக்க மனு தாக்கல் செய்தார். 

TNUSRB தலைவராக சுனில்குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு.. பாஜக எம்பிக்கு சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுவை பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

"குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்.." ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வயநாடு தேர்தலில் போட்டியா..? குஷ்பூ விளக்கம்

வயநாடு மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதற்கு குஷ்பூ மறுப்பு தெரிவித்துள்ளார்.

DD தொலைக்காட்சி அலுவலகம் முன்பு திமுக போராட்டம்

சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவோடு இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தி மாத கொண்டாட்டம்... பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம்  கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

பச்சை பால் பாக்கெட் சர்ச்சை.. விளக்கமளித்த ஆவின்

ஆவின் பச்சை பால் பெயர் மாற்றப்பட்டு, விலை உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மகள்களை மீட்டு தரகோரி ஆட்கொண்டர்வு மனு.. ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

ஈஷா யோகா மையத்தில் தங்களின் மகள் இருப்பதாகவும், அவர்களை மீட்டு தர கோரியும் பெண்களின் தந்தை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கோணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

முற்றும் திமுக - கம்யூ., மோதல்

மதுரையில் இன்று நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான பேருந்து துவக்க விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசனும் அக்கட்சியின் மாநகராட்சி துணை மேயர் நாகராஜனும் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING: BE கல்லூரிகளில் BBA, BCA-நிறுத்திவைக்க ஆணை | Kumudam News 24x7

அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிபிஏ, பிசிஏ படிப்புகளை புதிதாக தொடங்க அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என மண்டல இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18-10-2024 | Mavatta Seithigal

01 PM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

01 PM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

ஆம்ஸ்ட்ராங் கொலை - குற்றப்பத்திரிகையில் பரபரப்பு | Kumudam News 24x7

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் மேலும் சில பக்கங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

Today Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 18-10-2024 | Kumudam News24x7

Today Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 18-10-2024 | Kumudam News24x7

வீட்டில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. வெளியான பகீர் உண்மை| Kumudam News 24x7

சென்னை கண்ணகி நகரில் மின்கசிவால் தீப்பிடித்து எரிந்த வீடு.

தவெக அரசியல் பயிலரங்கம் – யாருக்கு அங்கீகாரம்? | Kumudam News 24x7

தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி என்பது நிரந்தரமானது அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் ஏற்பட்ட ராட்சத அலை இழுத்து செல்லப்பட்ட கட்டுமானங்கள் | Kumudam News 24x7

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணம் பகுதியில் சீரமைப்பு பணிக்கான கட்டுமானங்களை கடல் அலை இழுத்துச் சென்றது.

குடியிருப்புக்குள் புகுந்த ஏரி உபரிநீர்... கடும் அவதிக்குள்ளாகும் மக்கள்| Kumudam News 24x7

சென்னையில் உள்ள சில முக்கியமான பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

12 PM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

12 PM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

தனியார் பள்ளி பேருந்துகள் விபத்து... சிறைபிடித்த பெற்றோர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்துகள் முந்தி செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 மாணவிகள் காயமடைந்த நிலையில் பேருந்தை சிறை பிடித்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நொடியில் நடந்த சம்பவம்... துடிதுடித்து பலியான பெண்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழையால் ஒழுகும் ஊராட்சி மன்ற அலுவலகம்... வெளியான வீடியோவால் அதிர்ச்சி

வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி அலுவலக கட்டடத்தில் மழைநீர் ஒழுகி தேங்கியதில் கணினி, பேட்டரிகள், சான்றிதழ்கள் சேதமடைந்தன. உடனடியாக அலுவலகத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.