மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 02-11-2024 | Mavatta Seithigal |Kumudam News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 02-11-2024 | Mavatta Seithigal |Kumudam News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 02-11-2024 | Mavatta Seithigal |Kumudam News
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழை காரணமாக மரம் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.
Velachery Accident CCTV Footage: சாலை விபத்தில் உயிரிழந்த நடிகரின் மகன்; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்குச் சென்ற இருவர் சடலமாக மீட்பு.
சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் நித்திஷ் ஆதித்யா விபத்தில் சிக்கி பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்
உதகையில் தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்றும் நாளையும் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்பட்டுகிறது. இதனால் ஏராளாமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதை எதிர்த்து என் எல் சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுக சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் ஷோரனூரில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த 2 பெண்கள், 2 ஆண்கள் கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியாகினர். இவர்கள் 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் கூத்திரமேடு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7ம் தேதி, பழநி அடிவாரம் கிரிவீதியில் நடைபெற உள்ளது.
சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை அண்ணாநகரில் கூவம் ஆற்றில் பிறந்து சில மணி நேரங்களேயான குழந்தையின் உடல் மிதந்து வந்துள்ளது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பச்சிளம் சிசுவை கூவம் ஆற்றில் வீசிச் சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டதால் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை ஒரகடம் பகுதியில் ரூ.2,858 கோடி மதிப்பில் உலகளாவிய மையம் அமைப்பதற்காக அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.