TET தகுதி தேர்வு குறித்த உத்தரவு
அதனைத்தொடர்ந்து பூட்டுதாக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் மூலம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதி மொழியை ஏற்றுக்கொள்ளப்பட்டது.தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து, பள்ளி வகுப்பறையில் நடைபெற்று வந்த தேர்வினை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், TET தகுதி தேர்வு குறித்த உத்தரவு தொடர்பாக பள்ளி கல்வி துறையின் நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு, ஏற்கனவே மறு சீராய்வு மனு தமிழக அரசு சார்பில் செல்ல போகிறோம் அதற்கான மனு வழக்கறிஞர் எம்.பி.வில்சனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் யாருக்கும் பயம் தேவையில்லை
அது தொடர்பான பதிவு பட்டியல் நாளை வெளியாகிறது. இதுசார்ந்த வழிமுறை தெளிவுபடுத்துவது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு கேட்டுள்ளது. அதன்படி தமிழக அரசும் சட்டரீதியாக போராடுதுகிறது என்றாலும், இன்னொரு பக்கம் ஆசிரியர்கள் யாருக்கும் பயம் தேவையில்லை. ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என தெரிவித்தார்.
LIVE 24 X 7









