தமிழ்நாடு

கனமழை எதிரொலி! இன்று பள்ளிக்குப் போக வேண்டாம்! எந்தெந்த ஊர்களில் விடுமுறை?

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி! இன்று பள்ளிக்குப் போக வேண்டாம்! எந்தெந்த ஊர்களில் விடுமுறை?

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதுச்சேரி காரைக்காலில் பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (அக். 23) விடுமுறை அறிவிக்கப்பட்ட பகுதிகள்:

விழுப்புரம்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கள்ளக்குறிச்சி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவண்ணாமலை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரிகாரைக்காலில்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மழையின் தீவிரத்தைப் பொறுத்து உள்ளூர் நிர்வாகங்கள் கூடுதல் அறிவிப்புகளை வெளியிடலாம். எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.