தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போதும் அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது.
அடுத்த 24 மணி நேர நிலவரம்
இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது படிப்படியாக மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இந்த வளிமண்டல மாற்றங்கள் காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 21: தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
பிப்ரவரி 22: திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









