நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய கூலித் தொழிலாளி ஒருவர், கடந்த 2023-ஆம் ஆண்டு 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக அந்தச் சிறுமிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகளின் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை கவனித்த பெற்றோர், அன்புடன் விசாரித்தபோது நடந்த கொடூரத்தை அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
தீர்ப்பில், "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இரக்கம் காட்டுவது சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக அமையும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன உளைச்சலையும், அவர்களின் எதிர்கால வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளையும் அலட்சியப்படுத்த முடியாது. எனவே, குற்றவாளி சிறையில் மீதமுள்ள வாழ்க்கையை கழிப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை" என்று நீதிபதி கடுமையாகக் குறிப்பிட்டார்.
மேலும், வழக்கு தொடர்பான அனைத்து நீதிமன்ற ஆவணங்களிலும் குழந்தைகளின் அடையாளம் வெளிப்படாத வகையில் அவற்றை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ள

LIVE 24 X 7