தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தை விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!
Gold Rate
கடந்த சில நாட்களாகத் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்றைய சரிவைத் தொடர்ந்து இன்றைய தினமும் சென்னையில் அதிரடியாகக் குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது.

சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை அவ்வப்போது மாற்றமடைந்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினமும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 வரை அதிரடியாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ரூ.1,200 வரை சரிந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,16,000-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, வெள்ளியின் விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.285-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.2,85,000 (ரூ.2.85 லட்சம்)-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.