தமிழ்நாடு

தங்கம் விலை 2-வது நாளாக உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை 2-வது நாளாக உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!
Gold Rate
கடந்த சில மாதங்களாகவே ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று இரண்டாவது நாளாகத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

சர்வதேசச் சூழல்களுக்கு ஏற்ப, கடந்த மே 26-ஆம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது. இந்த வீழ்ச்சிக்குப் பிறகு, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமை காலையும் தங்கத்தின் விலை மேலும் சற்று ஏறுமுகத்தைக் கண்டுள்ளது.

அதன்படி, இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்துள்ளது. இதன் மூலம், சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,630-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,17,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் வெள்ளியின் விலை கணிசமாக உயர்ந்திருந்தது. நேற்று ஒரே நாளில் வெள்ளி கிராமுக்கு ரூ.5 மற்றும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து விற்பனையானது. இந்த நிலையில், இன்றைய சந்தையில் வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.