சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் போர் பதற்றம் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்றும் தங்கத்தின் விலை சரிவைக் கண்டுள்ளது.
தங்கத்தின் விலை
சென்னையில் கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.13,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், இன்றும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.400 சரிந்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,200 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கு விற்பனையாகிறது. இந்தத் தொடர் சரிவு நகைப்பிரியர்களுக்குச் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியின் விலை
தங்கத்தின் விலையைப் போன்றே இன்று வெள்ளியின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து, இன்று ரூ.2,35,000 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது.

LIVE 24 X 7