திராவிட சித்தாந்த கூட்டணி
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேமுதிக பலத்தை நிரூபிக்க வேண்டும். தேமுதிகவை வலுப்படுத்தி, 2011ல் கேப்டனுடன் 29 எம்எல்ஏ கோட்டைக்கு சென்றார்களோ,அதேபோல தேமுதிக 2.0 பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பல எம்.எல்.ஏ-க்கள் தேமுதிக சார்பாக கோட்டைக்கு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான். தேமுதிக நிகர் தேமுதிக தான், கேப்டன் ஸ்டைல் வேற, விஜய் ஸ்டைல் வேற என கூறினார். மேலும் எடப்பாடி தலைமையில் தான் கூட்டணி அமையும் என அமித்ஷா அண்மையில் கூறியிருந்தார் என கேள்விக்கு? கண்டிப்பாக கூட்டணி ஆட்சி தான் அமைய வேண்டும். அது திராவிட சித்தாந்த கூட்டணி ஆட்சியாக தான் அமைய வேண்டும்.
மாநாடு வெற்றிகரமாக முடியட்டும்
யாருக்கும் இடமில்லை தமிழ்நாடு என்பது திராவிட நாடு, திராவிட கொள்கைகள் உள்ள கட்சிகள் தான் கூட்டணி பெறும் சாத்தியம் உள்ளது.
சீமான் நடத்தும் ஆடு, மாடு மாநாடு குறித்து கேள்விக்கு, ஆடு, மாடுகள் ஓட்டு போட முடிந்தால் நடத்தலாம். இல்லையென்றால் வேஸ்ட் தான். கடலூர் மாநாடு வெற்றிகரமாக முடியட்டும் பின்பு மதுரையில் பார்ப்போம்” என தெரிவித்தார்.
LIVE 24 X 7









