ரயில்வே சிக்னலைத் துணியால் மறைத்து ரயிலை நிற்க வைத்து, பயணிகளிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை ரயில்வே போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
கடந்த 15-ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் - பொத்தேரி இடையே சென்று கொண்டிருந்தபோது, சிக்னல் சரியாகத் தெரியாததால் ரயில் மெதுவாக இயங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்திய நபர் ஒருவர், ரயிலுக்குள் புகுந்து தூத்துக்குடியைச் சேர்ந்த அசுதா என்ற பெண் பயணியின் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதுகுறித்த புகாரின் பேரில், எழும்பூர் ரயில்வே டி.எஸ்.பி கவின்னா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தபோது, அங்கிருந்த ரயில்வே சிக்னல் விளக்கு சட்டைத் துணியால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
24 மணி நேரத்தில் கைது
சம்பவ இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், பழைய குற்றவாளியான சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவரைக் குறிவைத்துத் தேடினர். நகையைப் பறிகொடுத்த பயணி அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து, தாம்பரம் ரயில்வே போலீஸார் குமரேசனை 24 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சென்னை சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர் குண்டாஸ் சட்டத்தில் சிறைக்குச் சென்று வந்தவர் என்பதும் தெரியவந்தது.
பகலில் ஆட்டோ... இரவில் நூதனக் கொள்ளை!
போலீஸ் விசாரணையில் குமரேசன் திகைப்பூட்டும் வாக்குமூலங்களை அளித்துள்ளார். பகல் நேரங்களில் சென்னையில் சாதாரணமாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், இரவு நேரங்களில் ரயில் பயணிகளைக் குறிவைப்பார். குறிப்பாகப் பேசின் பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை பகுதிகளில் ரயில்கள் மெதுவாகச் செல்லும்போது நகைகளைப் பறிப்பதையும், சென்னை புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சிக்னல் கம்பத்தில் ஏறி துணியால் விளக்கை மறைத்து ரயில்களை நிறுத்தச் செய்து கொள்ளையடிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.எஸ்.பி கவின்னா, ரயில்களில் பயணிப்பவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

LIVE 24 X 7