K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

மாநிலங்கள் அனைத்தும் இணைந்தது தான் இந்தியா- ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பழமை மாறாமல் நடைபெறும் எனவும் இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தலை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. வழக்கறிஞர்கள் அணி காவல் அணி.. ஸ்டாலின் பெருமிதம்

திமுகவினர்கள் மீது பாய்ந்த வழக்குகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்த  திமுக வழக்கறிஞர் அணி கழகத்தை காப்பாற்றும் காவல் அணி என்று சட்டத்துறை மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த ஏழு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரியார்-அம்பேத்கரை நேர்கோட்டில் நிறுத்தாதவர்களை மூளை உள்ளவராக கருதக்கூடாது- ஆர்.ராசா

பெரியாரையும், அம்பேத்கரையும் நேர்கோட்டில் நிறுத்தாத எவனும் மூளை உள்ளவனாக கருதக்கூடாது என்று திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்த்தி - ரவி ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தை நிறைவு.. முடிவுக்கு வரும் விவாகரத்து வழக்கு..!

நடிகர் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி தம்பதி இடையேயான சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்த பின் விவகாரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது

சட்டவிரோத மணல் கொள்ளை – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்,  அரசுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு..!

திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு இன்று (ஜன.18) சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.  இந்த மாநாட்டை திமுகவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையின் புதிய கட்டுப்பாடுகள்...!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னையை நோக்கி மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறை பல புதிய திட்டங்களை விதித்துள்ளது.

மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி..!

மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது