K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

மகப்பேறு சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ்.. 13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு பின் வயிற்றில் பேண்டேஜை வைத்து தைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடல் ஆமைகள் உயிரிழப்பு.. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..?  பசுமை தீர்ப்பாயம் கேள்வி

ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு.. புலன் விசாரணை தொடக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக  காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் கபடி போட்டி விவகாரம்.. சென்னை வந்தடைந்த வீராங்கனைகள்

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளான தமிழக வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பினர்.

மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ சோதனை நிறைவு.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!

மயிலாடுதுறையில் காலை முதல் நடைபெற்று வந்த தேசிய புலனாய்வு முகமை சோதனை நிறைவடைந்த நிலையில், செல்போன்கள், லேப்டாப் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking Bad பாணியில் மெத்தபெட்டமைன் விற்பனை -3 பேர் கைது

சென்னை ராயப்பேட்டையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பொறியாளர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த நபர்... என்ஐஏ அதிகாரிகளால் கைது..!

தீவிரவாத அமைப்பிற்கு மூளைச் சலவை செய்து இளைஞர்களை சேர்க்க முயன்ற தமிழ்நாடு பிரிவின் தலைவரான  அல்பாசித்தை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"அடிப்படை வசதிகள் இல்லை" - பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் வாயில் முன் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்... மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரன்..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் போலீசாரின் விசாரணைக்கு பின்ன்னர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி... மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது..!

டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் மூளையாக செயல்பட்ட இரண்டு பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை காவல்துறை வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.