மீண்டும் மழை தரும் பருவமழை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்வெட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சேலத்தில், நான்கு வயது பேத்தியைக் கடத்திய வழக்கில், பாதுகாப்புக் கருதி நண்பருடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடிய தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையின் விசாரணையில் இது தெரியவந்ததால், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையில் சிஎஸ்ஐ சர்ச் பிஷப் மோசடி வழக்கில், வழக்கு தொடுத்த உதவி ஆயர் ஆலயத்திற்குள் நுழைய விடாமல் பவுன்சர்கள் தடுத்துள்ளனர் இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவி மீது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் நாளையும் கோவை மற்றும் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொண்டு, கருணாநிதியின் சிலை மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைக்கிறார்.
நானும் ரவுடியென மிரட்டி மாமூல் கேட்டுத் தொல்லை கொடுத்த இளைஞரை, இளம்பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் வீசித் தற்கொலை என்று நாடகமாடி, பிணத்துடன் செல்ஃபி எடுத்த விவகாரத்தில் காவல்துறையினர் 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
”2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.