புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்கள்
வழக்கறிஞர் வஜித் கான் தனது புகாரில், "வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஹர்திக் பாண்ட்யா தேசியக் கொடியைத் தன் மீது போர்த்திக் கொண்டு ஆபாச நடத்தையில் ஈடுபட்டார். அவர் தேசியக் கொடியைப் போர்த்தியிருந்த நிலையிலேயே தனது தோழிக்கு முத்தமிட்டார். இந்தச் செயல் தேசியக் கொடிக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைச் சீர்குலைப்பதாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை மற்றும் விசாரணை
தேசியக் கொடியின் கண்ணியத்தைப் பேணுவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள புகார்தாரர், இது தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்டதை உறுதி செய்துள்ள காவல் துறையினர், அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
LIVE 24 X 7









