உலகில் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் மெக்ஸிகோ நாட்டின் மெக்ஸிகோ சிட்டியில் பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
மெக்ஸிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 வட அமெரிக்க நாடுகளில் கூட்டுத் தயாரிப்பாக நடைபெறும் இந்த உலகக் கோப்பைத் தொடரில், வரலாற்றிலேயே முதல்முறையாக 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரின் மிக முக்கிய முதல் லீக் ஆட்டத்தில், சொந்த மண்ணின் பலத்தோடு களம் கண்ட மெக்ஸிகோ அணியும் தென் ஆப்பிரிக்க அணியும் நேருக்கு நேர் மோதின.
மெக்ஸிகோ வீரர்களின் ஆதிக்கம்
ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்திலேயே மெக்ஸிகோ அணியின் வீரர் ஜூலியன் அண்ட்ரே குவானிஸ் ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணிக்கு ஆரம்பக்கட்ட முன்னிலையைத் தந்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில், மற்றொரு முன்னணி வீரரான ரௌல் ஜிமெனெஸ் அசத்தலாக இரண்டாவது கோலை அடித்தார். மறுபுறம், ஆட்டத்திற்குத் திரும்ப தென் ஆப்பிரிக்க வீரர்கள் எடுத்த தொடர் முயற்சிகள் அனைத்தையும் மெக்ஸிகோ அணியின் தற்காப்பு வீரர்கள் மிகச் சிறப்பாகத் தடுத்து நிறுத்தினர்.
அடுத்த ஆட்டத்திற்குத் தயார்
ஆட்டத்தின் இறுதிவரை தென் ஆப்பிரிக்க அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், மெக்ஸிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று நடப்பு உலகக் கோப்பைத் தொடரை வெற்றியோடு தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 7:30 மணிக்குத் தொடங்கவுள்ள 2-வது லீக் ஆட்டத்தில் தென் கொரியா மற்றும் செக் குடியரசு ஆகிய அணிகள் மோதவுள்ளன.

LIVE 24 X 7