தமிழகத்தில் அம்மன் வழிபாடு எத்துணை பிரபலமோ 'அத்துணை பிரபலமானது கேரளாவில் பகவதி வழிபாடு. அதாவது, இங்கே அம்மன் என்பதைத்தான் அங்கே பகவதி என்கிறார்கள் என்றுகூடச் சொல்லலாம். அந்த வகையில் கேரளத்து மக்களால் மட்டுமன்றி அம்மன் பக்தர்கள் அனைவராலுமே ஆராதிக்கப்படுபவள், மீன்குளத்தி பகவதி.
கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து 22 கிமீதூரத்தில் உள்ள பல்லசேனா எனும் ஊரில் உள்ளது, 'மீன் குளத்தி பகவதி' கோயில். இந்த அம்மன் மிகுந்த சக்தி வாய்ந்தவளாகக் கருதப்படுகிறாள். மீன் குளத்தி பகவதி வேறு யாருமல்ல; சாட்சாத் மதுரை மீனாட்சியேதான் என்கிறார்கள்!
அதிகாலை நேரத்திலேயே கோயிலை ஒட்டிய பெரிய தீர்த்தக் குளத்தில் நீராடி அம்மனை தரிசிப்பதற்காக எக்கச்சக்கமான பக்தர்கள் குவிந்துவிடுகிறார்கள். மிக நீண்ட வரிசையில் அமைதியாக அதேசமயம் பக்தியுடனும் பகவதியின் நினைவுடனும் மெல்ல நகர்ந்து சென்று தரிசிக்கிறார்கள்.
இந்தக் கோயிலுக்குள் செல்ல, ஆண்கள் வேஷ்டி அணிவதுடன், சட்டை பனியன் இன்றிச் செல்வதும் அவசியம். கேரளத்தில் பெரும்பாலான கோயில்களில் நடைமுறையில் இருக்கும் வழக்கம் இது.
சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் வசித்த வீர சைவ மன்னாடியார் (தமிழ்நாட்டில் மன்றாடியார்) இனத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர், கடுமையான பஞ்சத்திலிருந்து தப்ப, பசுமையான இடம் தேடிக் கிளம்பினர்.
அவர்கள் செய்து வந்த வைர வியாபாரத்துக்கு வறட்சி பிரதேசத்தில் வழியில் லாமலிருந்ததும் அவர்கள் குடிபெயர ஒரு காரணம்.
எங்கெங்கோ சென்று தங்க இடம் தேடிய அந்தக் குடும்பத்தினர், கேரளாவைச் சேர்ந்த பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்குள்ள செழிப்பினால் அவர்களின் வணிகம் ஓங்கி வளரத் தொடங்கியது. எனவே, கேரளா வாசிகளாகவே மாறி, அவர்கள் அங்கேயே வசிக்கத் தொடங்கினார்கள்.
இந்த வியாபாரிகள் குழுவில் மதுரை மீனாட்சியின் மீது அளவற்ற பக்தி கொண்ட பெரியவர் ஒருவர் இருந்தார். அவரும் அவருடைய குடும்பதினரும் மீனாட்சியைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றியதோடு, அடிக்கடி மதுரைக்கு நேரடியாகச் சென்றும் வழிபட்டு வந்தனர்.
எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாத அந்தக் காலத்தில், ஒருமுறை, வெயில், மழை, காற்று என்று பாராமல், காடு, மலை கடந்து, மாதக் கணக்கில் மிக நீண்ட கடின யாத்திரையாக மதுரை சென்று, மீனாட்சியைத் தரிசித்து அந்த முதியவர் கேரளா திரும்பினார். யாத்திரை சென்றவர்கள் திரும்பி வந்து வீட்டுக்குள் நுழைவதற்கு முன், நீராடியபின்பே நுழைவது அக்கால வழக்கம். அப்படி அந்த முதியவர், நீராடுவதற்காக குளக்கரையில் குடை ஒன்றையும் அதன் நிழலில் தன் பொருட்களையும் வைத்துவிட்டு, நீராடினார். நீராடி முடித்துவிட்டு கரைக்கு வந்து, குடையை எடுக்க முற்பட்டபோது, எடுக்க முடியவில்லை; மண்ணோடு பதிந்து இறுகி விட்டிருந்தது. சரி, மற்ற பொருட்களையாவது எடுக்கலாம் என்று முயன்றபோது அவற்றையும் எடுக்க முடியவில்லை. அவருக்கு அது வியப்பை அளித்தது.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை அழைத்து, தான் திரும்பி வரும் வரையில் அந்தக் குடையையும் பொருட்களையும் பத்திரமாகப் பார்த்துக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டுத் தன் வீட்டுக்குப் போனார். நடந்தவற்றைச் சொல்லி, குடும்பத்தினரைக் குளக்கரைக்கு அழைத்து வந்தார்.
அவர்களாலும் குடையையோ, பொருட்களையோ எடுக்க முடியவில்லை. அதேசமயம் அந்த இடத்தில் ஜோதி வட்டம் ஒன்று ஒளிர்ந்ததை அவர்கள் கண்டனர். அந்த அற்புதம் அவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.. ஜோதிடரை அழைத்து வந்து காரணத்தைக் கேட்டபோது, அந்தக் குடை பதிந்துள்ள இடத்தில் மதுரை மீனாட்சி பிரசன்னம் ஆகியிருப்பதாகக் கணித்துச் சொன்னார் ஜோதிடர். தள்ளாத வயதுடைய அந்த பக்தர், தன்னை தரிசிக்க தொடர்ந்து மதுரைக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் என்று, மதுரை மீனாட்சியே அங்கு பிரசன்னமாகியிருப்பதாகவும் மேலும் அந்த இடத்தில் மீனாட்சியம்மனுக்கு ஒரு கோயில் கட்டுமாறும் அவர் கூறினார்.
அதன்படி, அந்த வியாபாரியும் அவருடைய குடும்பத்தினரும் சிறியதாக ஒரு கோயிலைக் கட்டி, சாஸ்திர சம்பிரதாய பூஜைகளை நிறுவி, வழிபாடு செய்யத் தொடங்கினார்கள். இந்த இடம் குடைமன்னு' என்று அழைக்கப்படுகிறது.
குடைமன்னு உருவானதற்கு சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த சமூகத்தின் தலைவருக்கும், கோயில் அர்ச்சகருக்கும் ஒரே சமயத்தில் மீனாட்சியம்மன் கனவில் வந்து, மன்னாடியார் சமூகத்தினர் வசிக்கும் பகுதியின் நடுவில் தனக்கு ஒரு புதிய கோயில் எழுப்புமாறு பணித்தாளாம். அதன்படி, புதிய இடத்தில் கோயில் எழுப்பி, 'புனர் பிரதிஷ்டை' சடங்குகள் செய்யப்பட்டன.
இப்போதுள்ள மீன்குளத்தி பகவதி ஆலயம், மற்றும் அருகே உள்ள குளம் ஆகியவை அப்போதுதான் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. மீன்குளத்தி பகவதி கோயில், கேரள பாணியிலான கலை வேலைப்பாடுகளைக் கொண்ட இரண்டு நுழைவாயில்களோடு காட்சியளிக்கிறது. மேற்கு நுழைவாயிலை ஒட்டி, பெரிய தீர்த்தக் குளம் உள்ளது. கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மதிற்சுவரின் நிழல், பூமியில் விழுவதில்லை என்பது அதிசயம்!
முன் நிற்கும் கொடி மரம் கடந்து சென்று மூலவரான மீன்குளத்தி பகவதியை தரிசிக்கலாம். மூல விக்கிரகம் தவிர, சப்த மாதாக்கள், பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, வராகி, கணபதி, வீரபத்ரர், துர்க்கை, சிவன், பைரவர், பிரம்ம ராட்சஸ், சாஸ்தா என்று ஆலய வளாகத்தில் பல்வேறு தெய்வங்கள், பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்குக் கோயில் திறக்கப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு மூடப்படுகிறது. திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் அதிகாலை 5 மணிக்குத் திறந்து காலை 10.30 மணிக்கு மூடுகிறார்கள். பிற்பகல் 5.30 மணிக்குத் திறந்து இரவு 7.30 மணிக்கு கோயில் மூடப்படுகிறது.
இந்த ஆலயத்துக்கு நவராத்திரி, கார்த்திகை, மண்டல விளக்குத் திருவிழா, பள்ளிசேட்டை, பைரவர் திருவிழா என்று பல விழாக்கள் இருப்பினும் எட்டு நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் மாசித் திருவிழாவே மிகவும் சிறப்பானது. ஓட்டந் துள்ளல், கதகளி போன்றவை மாசித் திருவிழாவின் சிறப்பம்சங்கள்!
ஆலயத்தை ஒட்டியுள்ள தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் அவசியம் நீராடுகிறார்கள். ஏனெனில், நீண்ட காலமாகத் தொல்லை. தந்து வரும் நோய்கள், இந்தத் திருக்குளத்தில் நீராடினால், குணமடையப் பெறும் என்பது மக்களின் அனுபவ பூர்வமான நம்பிக்கை! வர்த்தகம் வாணிபத்தில் தடை உள்ளோரும், சுயதொழில் செய்பவர்களும், வாழ்வாதாரத்தை இழந்து வாடுபவர்களுக்கும் இங்கே வந்து வணங்கினால், அன்னை பகவதி அவர்கள் உய்ய அருள்புரிவாள் என்கிறார்கள்.

LIVE 24 X 7