இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர், ஆஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார். முன்னதாக ஆர்யன் பங்கர் என்ற பெயரில் ஆண்களுக்கான உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த இவர், பாலின மாற்றத்திற்குப் பிறகு தற்போது பெண்கள் கிரிக்கெட்டில் களமிறங்க உள்ளார்.
மும்பை அணிக்காக 16 மற்றும் 23 வயதுக்குள்பட்டோர் போட்டிகளிலும், புதுச்சேரி அணிக்காக 19 வயதுக்குள்பட்டோர் போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் கொண்டவர் அனயா (ஆர்யன்). சர்ப்ராஸ் கான், முஷீர் கான் போன்ற நட்சத்திர வீரர்களுடன் இணைந்து விளையாடிய இவர், கடந்த 2023-ஆம் ஆண்டு திருநங்கையாக மாறப்போவதாக அறிவித்து ஹார்மோன் மாற்று சிகிச்சையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தாய்லாந்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சையையும் முழுமையாகச் செய்து கொண்டார்.
பெண்ணாக மாறிய பிறகும் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறையாததால், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பெண்கள் பிக்-பாஷ் தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளின்படி, திருநங்கையாக மாறிய ஒரு வீரர் பெண்கள் பிரிவில் விளையாட வேண்டுமெனில், அவரது ரத்தத்தில் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) ஹார்மோன் அளவு தொடர்ந்து 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த அளவை விட அதிகமாக இருந்தால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) கட்டுப்பாடுகளின்படி போட்டிகளில் பங்கேற்க முடியாது.
அனயா பங்கருக்கு நடத்தப்பட்ட மருத்துவச் பரிசோதனைகளில் அவரது ஹார்மோன் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அவருக்கு ஆஸ்திரேலியாவில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள போட்டிகளில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைப் (BCCI) பொறுத்தவரை, திருநங்கைகள் பெண்கள் கிரிக்கெட்டில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை எந்தவொரு தெளிவான கொள்கையையும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாகத் தான் பிசிசிஐ-க்கு அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்றும் அனயா தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7