கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்தைக் கைப்பற்ற தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே புதிய அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ளன.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், தவெகவுக்கு ஆதரவாகக் காங்கிரஸ் (5 எம்.எல்.ஏ-க்கள்), விடுதலைச் சிறுத்தைகள் (விசிக), கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகள் கரம் கோர்த்தன. இதில் தவெக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகளும், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்குத் தலா 1 அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில், அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சி.வி. சண்முகம், தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் அந்த இடம் தற்போது காலியாகியுள்ளது. இதன் மூலம் டெல்லி நாடாளுமன்ற அரசியலில் தடம் பதிக்கத் தவெகவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இந்த ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்குத் தகுதியான வேட்பாளரைத் தவெக தலைமை தீவிரமாகத் தேடி வருகிறது. இதற்கிடையே, நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் பெயர் தவெக தரப்பில் பலமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மறுபுறம், இந்த மாநிலங்களவை சீட்டைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தவெகவுக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் - தவெக கூட்டணி அமைவதற்குக் தொடக்கத்திலிருந்தே தீவிரமாகச் செயல்பட்டுவந்த, ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்திக்கு இந்த எம்பி பதவியைக் கேட்டு காங்கிரஸ் தலைமை அடம் பிடித்து வருவதாகத் தெரிகிறது. தனக்குக் கிடைத்த இந்த முதல் டெல்லி வாய்ப்பைத் தவெக தன் வசமே தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது தனக்கு ஆதரவளித்த காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்குமா என்ற விவாதம் தற்போது பலமாக எழுந்துள்ளது.

LIVE 24 X 7